தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் பிரமாண்ட பேரணி!

- குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்று வருகிறது.
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது குடும்பத்தாருடன் பேரணி நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை, ஆலந்தூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தி செல்கின்றனர். ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை வரை இந்த பேரணி நடைபெற அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகை வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னர் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பேரணி தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவுவும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025