டெல்லி கலவர விவகாரம்… நரி வந்ததே தப்பு இதுல ஊளை வேற இடுதா?… சீறிய சீமான்…

பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் வன்முறைகள் நடக்கும் என பதிவிட்டிருந்தார். இது குறித்து தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். தற்போது ஜனநாயக வழியிலான அமைதியாக நடைபெரும் அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முன் தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்! என்றும், நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு… எங்களது பெருந்தன்மையும் பொறுமையும்தான் உங்களது இருப்பை இங்கு நிலை கொள்ளச் செய்திருக்கிறது. இங்கிருக்கும் இசுலாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல; காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடிகள். எங்கள் உடன் பிறந்தவர்கள். எங்களது இரத்த உறவுகள். இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை. தமிழர்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம். அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ள வேண்டும்; எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்! கவனம் என்றும் நரி ஊருக்குள் வந்ததே தவறு.. இதில் ஊளையிட்டுக்கிட்டு வேற வருதா? என்று சொலவடையுடன் அதிரடிய்யாக குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025