ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை..!
ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர்களுது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடதிற்கு சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதையை செலுத்தினர்.
ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் மாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.