செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை… ஆய்வு செய்ய இஎஸ்ஐ மருத்துவக்குழு வருகை.!
செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக்குழு வருகை.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜெரி சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் இஎஸ்ஐ(ESI) மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் குழு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.