Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

2026 தேர்தலில் ஒரே வெர்சன் அதிமுக தான். மக்கள் திமுகவுக்கு பெரிய 'ஓ'-வாக போட போகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.  

Edappadi Palanisamy criticized TN CM MK Stalin

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக 7வது முறையும் ஆட்சியை கைப்பற்றும். இதுவரை திராவிட மாடல் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, 2026 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O-வை காணும்.” என பேசியிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கூற்றை விமர்சிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் மக்கள் பெரிய ஓ போடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி.

போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி. போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி. ஸ்டாலின் மாடல் சமூக (அ)நீதிக்கு வேங்கைவயலே சாட்சி.

Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம். அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு முதலமைச்சரே சாட்சி.

2026-ல் ஒரே version தான். அது அதிமுக version தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய ‘ஓ’ (O) வாக போட்டு Bye Bye ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் (மு.க.ஸ்டாலின்) சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. ” என விமர்சித்து பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்