இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி பிப்ரவரி 7, வேட்பு மனுக்கள் மீது பிப்ரவரி 8-ஆம் தேதி பரிசீலினை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தாக்கலாகும் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 10 ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பிப்., 27ல் வாக்குப்பதிவும், மார்ச் 2ல் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 5 ஞாயிறு என்பதால் வேட்மனு தாக்கல் செய்ய இயலாது.
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும், தேமுதிக சார்பாக அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அமமுக – சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி – மேனகா நவநீதன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.