இடைத்தேர்தல் – ஈரோடு வந்தது மத்திய பாதுகாப்பு படை!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 3 பிரிவுகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை ஈரோட்டில் இறங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் உள்ள நிலையில், ஒருபக்கம் அரசியல் கட்சிகள் வாக்குசேகரிக்கும் பணியில் களத்தில் இறங்கியுள்ளனர். மறுபக்கம், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை, பணப்பட்டுவாடாவை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி மத்திய பாதுகாப்பு படை ஈரோடு சென்றது. அதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்தியன் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மூன்று படை பிரிவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும் தற்போது ஈரோடு வந்தடைந்தனர். ஒரு கம்பெனியில் 90 பாதுகாப்பு வீரர்கள் வீதம் 180 பேர் வந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை கம்பெனி கமாண்டர் லேக்ராஜ் மீனா தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். அதுமில்லாமல், தமிழ்நாடு காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.