தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி இடைத்தேர்தல்! வெளியான முக்கிய அப்டேட்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 133 இடங்கள் மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் உள்ளிட்ட மற்ற அதிகாரப்பூர்வ தேதிகள் கொண்ட அப்டேட்டை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.