இடைத்தேர்தல் களம் : ஜெயலலிதா மரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
அதிமுகவினர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவல்களையே தங்களது ஆட்சியில் மறைத்துவிட்டார்கள். என இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோடு கிடைத்தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றோடு பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை பரபரப்பாக ஆற்றி வருகின்றனர்.
பிரச்சாரத்தில் முதல்வர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக காலை முதலே வீதி வீதியாக திறந்த வெளி வாகனம் வழியாகவும், நடந்து சென்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜெயலலிதா உடல் நிலை : தற்போது அவர் ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசுகையில், அதிமுக செய்யாமல் விட்டதையும் திமுக நிறைவேற்றி வருகிறது. அதிமுகவினர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவல்களையே தங்களது ஆட்சியில் மறைத்துவிட்டார்கள். என கூறினார்.
கொடநாடு கொலை : மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் விரைவில் குற்றவாளிகள் யார் என்பது தெரிந்துவிடும் என கூறிய அவர், தேர்தல் முடிந்தவுடன் திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களும் முழுவீச்சில் நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.