ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறவுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து அங்கு வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதால் தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு தொகுதிக்கு வந்த வெளிமாவட்டத்தினர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜனவரி 23ம் தேதி தொடங்கிய ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெற்றது.
209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். நாளை மறுநாள் (பிப்ரவரி 5ஆம் தேதி) வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சி அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதியதாக தொடங்கிய தவெக கட்சி வரை பெரும்பாலான கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.