ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்திசென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai metro

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது.

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் கொள்ளளவு சுமார் 50,000 இருக்கைகள், எனவே இருக்கைகள் அனைத்தும் வேகமாக புக்கிங் ஆனது. இந்த சூழலில், டிக்கெட் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்திசென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிகஅருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23, 2025 ஆம் தேதி நடைபெறஉள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தைவழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்துசெயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில்(both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில்ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவுமற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டிநடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையேமெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். ​

அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசிமெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில்நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில்நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல்மெட்ரோ இரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” எனவும் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்