பட்டாம்பூச்சியின் உயிரை காக்க மனு கொடுத்த வினோதம்.. நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி..

Default Image
  • சென்னை மெட்ரோ ரயிலில் சிக்கி உயிரிழக்கும் வண்ணத்து பூச்சிகள்.
  • மணு கொடுத்த உடன் நடவடிக்கை என முதல்வர் உறுதி.

நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தாலும் சாலை மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல… இப்பூவுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்க்கும் உணவு சங்கிலிக்கும்  ஊன்றுகோலாக இருக்கக் கூடிய சின்னச் சின்ன உயிரினங்களும் தான்.சென்னை  பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மார்க் க்ரிகோரியஸ், கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசியராகப் பணிபுரிந்து வருகிறார். தினமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சதீஷ்,

Related image

ரயில் நிலையத்தில் தினமும்  வண்ணத்துபூச்சிகள் இறந்து கிடப்பதைக் கவனித்துள்ளார். இயற்கை ஆர்வலரான இவர் , உடனே தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வுக்காக மனு ஒன்றையும்அனுப்பிவைத்துள்ளார்.  பின்,  முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், `சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த கடிதத்தில் பதில் வந்திருந்தது. நான் மனு கொடுத்த பிறகு திருமங்கலம் மெட்ரோ நிலையத்துக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆய்வுக்கு வந்துள்ளனர்.

Image result for chennai metro butterfly

மறுநாளிலிருந்து நான் பட்டாம்பூச்சிகளைப் பார்க்கவில்லை. அவை இறந்து விழுந்தாலும், உடனே  அதனை சுத்தம் செய்துவிடுகின்றனர். என்றாலும் இதற்க்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்றும் மீண்டும் ஒரு மணு கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்