5 ஆண்டுக்கு நிலைத்து நிற்கும் 100 அடி கொடிக் கம்பம்.. தவெக மாநாட்டில் சிறப்பு.!
தவெக-வின் முதல் மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார் அக்கட்சித் தலைவர் விஜய்.
விழுப்புரம் : விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. அவர்களுக்கு நடுவே விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க, மற்றொரு பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகின்றனர். அட ஆமாங்க.. மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றுகிறார்.
அதன்படி, 27ஆம் தேதி மாலை 4 மணி விஜய் கொடியை ஏற்றி தனது உரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் வி.சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பம் பொருத்தும் பணி தொடங்கியிருக்கிறது.
தற்பொழுது, தவெக மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள கொடிக்கம்பத்தை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். அது மாட்டுக்கும் இல்லாமல், அவர் இரவு- பகல் பாராமல், மாநாடு வேலைகள் ஒவ்வொன்றையும் பிசுறு தட்டாமல் கூடையே இருந்து கவனித்து வாருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்
இந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படாது. இதற்காக தவெக கட்சி சார்பில், மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்ற என்பவரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு சுமார் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 27 விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் என்றும், அதில் சிலர் அதிக விலைக்கும், மீதமுள்ளர்கள் பணமே வேண்டாம் என விஜய்க்காக இந்த நிலத்தை மாநாட்டிற்காக குத்தகைக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.