ஜீன் 22ம் தேதி பொதுக்கூட்டம்? சீமானுடன் கூட்டணி அமையுமா? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்.!

vijay seeman

நடிகர் விஜய் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினமாகக் கருதப்படும் (மே 28ம் தேதி) இன்று நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்படி, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தார். அங்கு அவர், மக்களுக்கு அன்னதானம் உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார்.

உணவு வழங்கிய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தளபதி விஜய் ஆணைக்கிணங்கதமிழகம் முழுவதும் மதிய உணவு வழங்கி வருகிறோம். இது இன்று ஒருநாள் மட்டும் அல்ல, தமிழகத்தில் 23 இடங்களில் தளபதி விலையில்லா விருந்தகம் வாயிலாக தினமும் காலை வேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. தளபதி சொல்லிட்டாருனா அடுத்த நொடி பணி ஆற்றுவோம்” என்று கூறினார்.

அப்பொழுது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஜீன் 22 – த.வெ.க.,வின் முதல் பொதுக்கூட்டமா? என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் “அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம். பொதுக்கூட்டம் பற்றிய கேள்விக்கு ஏதுவாக இருந்தாலும் தலைவரே அறிவிப்பார்” என்றார்.

பின்னர், நாம் தமிழருடன் கூட்டணி அமையுமாச ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “தலைவர் விஜய் அனைத்து தரப்பிடமும் ஆலோசனை செய்து வருகிறார். எல்லா முடிவுகளையும் தலைவர் தான் எடுப்பார், ஒரே நிச்சயம் அறிவிப்பார்” என த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புகார் அளிப்பதற்கும், மேலும் சட்ட உதவி செய்வதற்கும் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று  த.வெ.க கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump