ரஷ்யாவில் தமிழக பொறியாளரை தமிழர்களே கும்பல் சேர்த்து பணம் பறித்த சோகம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி என்ற ஊரில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன், தனது தொழில் தொடங்குவது சம்பந்தமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நான்கு என அனைவரும் நட்பாக பழகி உள்ளனர்.
பிறகு, அவரை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு மேலும் பலமாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர் ரஷ்யாவில் முதலுதவி செய்து கொண்ட செந்தாமரை கண்ணன் சென்னை வந்தடைந்துள்ளார்.
அவர் தற்போது படுகாயங்களுடன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்டு அதன் பேரில் வழக்கு விசாரணையை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.