Bussy Anand - tvk [file image]
திருப்பூர் : நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்தனர். அதற்கான வேலைகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று திருப்பூர் முத்தன்னம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தோழர்கள்,தோழிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “பணத்துக்காகவும் காசு காகவும் கூடுற கூட்டம் இல்ல, இது தளபதி விஜய் என்ற ஒரு முகத்துக்காக சேர்ந்த கூட்டம். யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் பதவிகள் வழங்கப்படும்.
எவர் ஒருவர் போஸ்டர் ஒட்டியும் கொடி பிடித்தும் கட்சிக்காக உழைப்பவர்ளோ, அவர்கள் தளபதியாரால் கைவிடப்பட மாட்டார்கள் என கூறிய அவர், சும்மா, வீரவசனம் பேசிவிட்டு மைக்கில் கைதட்டிவிட்டு போவது கிடையாது” என்றார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…