தவெக கட்சியில் யாருக்கெல்லாம் பதவி? நெத்தியடி அடித்த புஸ்ஸி ஆனந்த்.!

Bussy Anand - tvk

திருப்பூர் : நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்தனர். அதற்கான வேலைகளை கட்சியின் பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று  திருப்பூர் முத்தன்னம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம்‌ பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தோழர்கள்,தோழிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “பணத்துக்காகவும் காசு காகவும் கூடுற கூட்டம் இல்ல, இது தளபதி விஜய் என்ற ஒரு முகத்துக்காக சேர்ந்த கூட்டம். யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் பதவிகள் வழங்கப்படும்.

எவர் ஒருவர் போஸ்டர் ஒட்டியும் கொடி பிடித்தும் கட்சிக்காக உழைப்பவர்ளோ, அவர்கள் தளபதியாரால் கைவிடப்பட மாட்டார்கள் என கூறிய அவர், சும்மா, வீரவசனம் பேசிவிட்டு மைக்கில் கைதட்டிவிட்டு போவது கிடையாது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்