வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் கடந்த 19-ஆம் தேதி முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறித்தும் சொன்னீர்கள். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டமும் முதல் முறையாக இந்தக் கோவையில் தான் நாம் தொடங்கியிருக்கிறோம்.
ஏதோ பேசியிட்டு, இத்துடன் இந்தப் பிரச்சனை முடிந்துவிடும் என்று நாங்கள் இருக்க மாட்டோம். உங்களை அடிக்கடி இதுபோன்ற கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தி சந்திக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் தொடர்ந்து பெறுவோம். அந்தப் பணியை நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவர்களும், சிறு. குறு தொழில் துறையை கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் அன்பரசன் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.
தேவைப்படுகிறபோது நானும் வருவேன், அவசியம் வருவேன், அதில் எத்த மாற்றமும் கிடையாது. அதையே தொடர்ந்து சொல்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தத் துறையினுடைய அதிகாரிகளிடத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் எப்போது வேண்டுமானாலும் எங்களைச் சந்திக்க நீங்கள் வரலாம் அதை எந்த நிலையிலும் நாங்கள் நிச்சயமாக மாறுபட மாட்டோம்.
எனவே, நீங்கள் எடுத்துச் சொன்ள அனைத்து கருத்துக்களையும் படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொல்லி அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறோம். எனவே, மீண்டும் சந்திப்போம்,
இங்கே பேசிய ஒரு நண்பர், பத்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கணக்குகளையெல்லாம் வணிகவரித் துறை கேட்பதாக கட்டிக் காட்டியிருக்கிறார். இதுகுறித்து வணிகவரித் துறை அமைச்சரிடமும் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வரிடம் தொழிலதிபர்கள் புகாரளித்த 10 நாட்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…