சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.