நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம்
நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் தமிழக முழுவதும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இருப்பினும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட,நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தமியாகி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுபாதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.