பேருந்துகளை முழுமையாக பரிசோதித்த பிறகே இயக்க வேண்டும்.! – அமைச்சர் சிவசங்கர் உத்தரவு.!

சென்னையில் நேற்று மாநகர பேருந்து ஒன்று, திருவேர்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு  சென்று கொண்டிருந்தது, அப்பொழுது அம்ஜிக்கரை பகுதியை பேருந்து நெருங்கியபோது பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் பேருந்து இருக்கைக்கு அடியில் இருந்த பலகை திடீரென விலகி அதில் தவறி விழுந்தார்.

ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.!

அப்போது அவருடன் பயணம் செய்த சகப்பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் சிறு காயங்களுடன் தப்பித்த அந்த பெண்மணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அப்பெருந்தில் பயணம் செய்த பயணிகளையும் வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் சென்னையில்அரசு பேருந்தில் பயணிப்போரின் பாதுகாப்பு  குறித்து கவலையை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது, இந்த சம்பவத்தை அடுத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர் அவர்கள்,  அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின்னரே இயக்க வேண்டும் எனவும், மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும், மேலும்  சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மேற்கூரையையும் இதர பாகங்களையும் சரியாக பரிசோதித்து அதன் பின்னரே இயக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்