வெளிமாநிலங்களுக்கு செல்ல தமிழகத்திலிருந்து பேருந்து போக்குவரத்து துவக்கம்.!
தமிழகத்தில் முதற்கட்டமாக 30 ஆந்திர மாநிலத்தவர்கள், 20 கேரளத்தவர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கபட்டுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுதும் கடந்த 4ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற இடங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
தமிழக போக்குவரத்து கழகத்திடம் 1082 சொகுசு பேருந்துகள் உள்ளன. இதில், சிலவற்றின் மூலம் மட்டும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா இல்லாத வெளிமாநிலத்தவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு பரிசோதனை செய்து அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி தற்போது முதற்கட்டமாக 30 ஆந்திர மாநிலத்தவர்கள், 20 கேரளத்தவர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளனர்.
தற்போது, அரசு ஊழியர்களை வேலைக்கு அனுப்பிவைக்கபட்டு வருவதாகவும், வெளிமாநிலத்தவர்களையும் அனுப்பிவைத்து வருவதாலும், அரசு அனுமதி தந்தால் அனுமதி பெற்று வருவோர்களை வேறு மாவட்டத்திற்கு அனுப்பவும் தயாராக இருக்கிறோம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்ளாராம்.