பஸ் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!
தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று, விடுப்பில் சென்றவர்கள், வாரவிடுமுறையில் இருந்தவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்களை வைத்து பேருந்தை இயக்கியதால், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், இரண்டாம் நாளான இன்று தலைகீழாக மாறி, பேருந்து சேவை பல் இடங்களில் முடங்கியுள்ளது.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்
தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அரசு இப்படி ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு வலியுறுத்தி, கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனிடையே, மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.