தமிழகத்தில் பேருந்துகள் ஓடாததால் மக்கள் கடும் அவதி ! தூத்துக்குடி, சிவகங்கையில் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்…..

Default Image

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் பேருந்துகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அனுமதியின்றி இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் குளிரில் இரவு முழுவதும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடந்தனர்.
 
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, சேலத்தில் வழக்கத்திற்கு மாறாக, குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். வெளியூர் செல்ல பேருந்து கிடைக்காத பயணிகள் இரவுப் பொழுதை பேருந்து நிலையத்திலேயே கழிக்க நேரிட்டது.
 
கோவையில் அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகளை இயக்க ஊழியர்கள் மறுத்துள்ளதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை கோட்டத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர் மாவட்ட பேருந்துகளும் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. இதனால் மொத்தமுள்ள 26 பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 13 பணிமனைகளில் இருந்தும் ஓரளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரியில் 5 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு கருதி கேரள மாநிலப் பேருந்துகளும் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி: போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் பல்வேறு இடங்களில் பேருந்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, பெரம்பலூரில், கடலூரில் உள்ளிட்ட இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்