வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

Default Image

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் பேருந்துகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அனுமதியின்றி இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் குளிரில் இரவு முழுவதும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடந்தனர்.எனவே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகின்றனர் .
எனவே ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், துறை செயலாளர்கள் பங்கேற்கற்றனர் …
வேலை நிறுத்தத்தை சமாளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை தீவிர ஆலோசனை …
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்