தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட முடிவு !
தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தொழிற்சங்கங்களை அழைத்து மீண்டும் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றார். தமிழகம் முழுவதும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
source: dinasuvadu.com