நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.நாளை முதல் தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…