இன்று முதல் கன்னியாகுமரியில் பேருந்து சேவை தொடக்கம்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது பொதுப்போக்குவரத்து சேவை.
தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நேற்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 6 மண்டலங்களில் நேற்று பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இன்று காலை 6 மணி முதல் இரவு 09 மணி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேற்று விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன்படி, அம்மாவட்டத்தில் பேருந்து சேவை காலை 6 மணி முதல் தொடங்கியது. ஒரு பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் சமூக இடைவெளி மிக முக்கியம், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு பேருந்தில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்ததால் நேற்று இயக்க முடியவில்லை. ஆனால் அந்த பணி நிறைவடைந்ததையொட்டி பேருந்துகள் இன்று இயக்கப்படும் என்றும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.