கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து இயக்கம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம்,காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் ஓடும் என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். தற்போது தலைமை செயலகத்தில் பேட்டி கொடுக்கையில் அரசு பேருந்தில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத் தொடங்கும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.