பேருந்தில் பயணிப்பவர்கள் ரூ. 5 செலுத்தி முகக்கவசம் வாங்கி கொள்ளலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
பேருந்தில் பயணிப்பவர்கள் ரூ.5 செலுத்தி முகக்கவசம் வாங்கி கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4-ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் மாநிலங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், நடத்துநரிடம் ரூபாய் 5 செலுத்தி முகக்கவசம் வாங்கி கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
முகக்கவசம் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்கள், நடத்துநரிடம் ரூபாய் 5 செலுத்தி முகக்கவசம் வாங்கி அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.#MRV pic.twitter.com/VBngC0zaqd
— M.R Vijayabhaskar (@OfficeofminMRV) September 9, 2020