பஸ்பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சென்னை மாநகர பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு அதே விலையில் தொடர்ந்து விற்கப்படும் என தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் சீசன் டிக்கெட்டுகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் 320 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு சியுஜி செல்போன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
மாநகரப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு அதே விலையில் வழங்கப்படும் என்று கூறினார். இதே நேரத்தில் குறிப்பிட்ட இரு நிறுத்தங்களுக்கு இடையிலான சீசன் டிக்கெட்டின் குறைந்த பட்ச கட்டணம் 240 ரூபாயிலிருந்து 320 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
கட்டண உயர்வால் அரசுப்பேருந்துகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என்றும், இதனை சரி செய்யும் விதத்தில் ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுவதாகவும் கூறினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.