சிவகங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! 7 ஆம் வகுப்பு மாணவன் பலி…
சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது, காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த விபத்துக்குள்ளானது பள்ளி வாகனமே இல்லை என்றும் அந்த வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் செய்தியாள்களிடம் விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.
அது மட்டும்மல்ல, மாணவன் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி வாகனத்துக்கு அனுமதி பெறாதது அம்பலமாகியுள்ளது, வழக்கமான ஓட்டுநருக்கு பதிலாக, வேறு ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது.