இன்னும் சில மாதங்களில் பேருந்து கட்டணம் உயரும் – எடப்பாடி பழனிசாமி
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பேசிய அவர், இந்தியாவில் சூப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பராக இருக்கிறார்.
இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை திமுக துல்லியமாக செய்து வருகிறது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது.
தமிழகத்தில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றும், போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்கள் பேருந்து கட்டணம் உயிரும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு யாராலும் மறக்க முடியாது என்று விமர்சித்த அவர், நாட்டு மக்களை நம்பி ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.