பேருந்து கட்டணம் உயர்வு..? – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..!
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்த பேருந்து சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை; போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நிதிச்சுமையை பற்றி கவலைப்படவில்லை.
மக்கள் நலனைத்தான் பார்க்கச் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.