தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்!

Default Image

 
இன்று காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதேபோல், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புக்களை புறகணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து கட்டண விவரம் :
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், ஜனவரி 20 ஆம் தேதி  முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவித்தது.
அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்:
புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு
மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு
புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 ஆக உயர்வு!
வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆக உயர்வு!
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது!
குளிர்சாதனப்பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டது
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்!
சென்னையில் மாநகரப்பேருந்துகளுக்கு இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 அல்ல, ரூ.5
சென்னை மாநகரப் பேருந்தில் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்