தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், கடந்த 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்:
புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு
மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு
புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 ஆக உயர்வு!
வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆக உயர்வு!
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது!
குளிர்சாதனப்பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டது
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்!
சென்னையில் மாநகரப்பேருந்துகளுக்கு இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 அல்ல, ரூ.5
சென்னை மாநகரப் பேருந்தில் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஓய்வுநாளான இன்று, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், காலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர்.
அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் ,சென்னை, சேலம் மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தில் அலைமோத தொடங்கினர்.
காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம் மற்றும் பெங்களுர் செல்லும் ரயில்கள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் போன்றவற்றில் அதிகளவில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், ஏராளமான பயணிகள் நிற்கக்கூட இடம் கிடைக்காமல், வாசலில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதேபோல, சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…