தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்று, காலை சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். மேலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும், 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 27-ந்தேதி தொடங்கும். பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…