தாங்களே அரசு பேருந்தை சேதப்படுத்திவிட்டு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக அண்ணா தொழிற்சங்கத்தினர் நாடகம்!
தஞ்சையிலிருந்து திருப்பதி புறப்பட்ட அரசுப் பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். கோடியம்மன் கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக, காவல்நிலையத்தில் ஓட்டுநர் வீரமணியும், நடத்துநர் செல்வகுமாரும் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பேருந்தின் நடத்துநரான செல்வகுமார், பேருந்தில் வந்த வினித் என்ற நபரின் உதவியுடன் முகப்பு விளக்கை கல்லால் அடித்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து பொய்ப் புகார் அளித்த ஓட்டுநர் வீரமணி மற்றும் நடத்துநர் செல்வகுமாரை கைது செய்த காவல்துறையினர், வினித்தை தேடி வருகின்றனர்.
source: dinasuvadu.com