புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25-ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்கும்போது மிக கனமழை உடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் நாளை மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்களும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள தவிர்க்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கிராமங்களில் மீனவர்கள் வாழ்வாதாரங்களான கட்டுமரங்கள், மின் மோட்டார் பொருந்திய படகுகள், மீன் வலைகள் போன்றவற்றை உரிய முறையில் பாதுகாத்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…