#BREAKING: நிவர் புயலால் இந்த 7 மாவட்டங்களுக்கு பேருந்து ரத்து – முதல்வர் அறிவிப்பு..!

Default Image

புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25-ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்கும்போது மிக கனமழை உடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் நாளை மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்களும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள தவிர்க்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர கிராமங்களில் மீனவர்கள் வாழ்வாதாரங்களான கட்டுமரங்கள்,  மின் மோட்டார் பொருந்திய படகுகள், மீன் வலைகள் போன்றவற்றை உரிய முறையில் பாதுகாத்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்