சர்கார் படத்தில் டிவியை எரித்தால் சம்மதமா …! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி..!
மிக்ஷி கிரைன்டர் எரித்ததுதான் பிரச்சனையா? டிவியை எரித்தால் திருப்தியா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில் ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டது.
இதன் பின் நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை முருகதாஸ் தனது டிவிட்டர் பகக்த்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை முருகதாஸ், நீதிமன்றத்தில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்,தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொல்வது சட்டவிரோதம் ஆகும்.அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை.சர்காரை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை .
இந்நிலையில் முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முருகதாஸை கைது செய்ய தடைவிதித்தார் .இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை தடைவிதித்தார்.
அதேபோல் அரசு தரப்பு ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.
மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறுகையில்,சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.தணிக்கை சான்றிதழ் வழங்கிய படத்திற்கு எதிர்ப்பு ஏன்? என்றும் மிக்ஷி கிரைன்டர் எரித்ததுதான் பிரச்சனையா? டிவியை எரித்தால் திருப்தியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.சர்கார் பட போஸ்டரை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் மீது எத்தனை வழக்கு போடப்பட்டு உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முருகதாசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.