அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.