பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி.. கரையை கடப்பது எப்பொழுது?
புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் திசை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகரும் இந்த புயலால் குமரி, பாம்பன், ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 70-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதன்பின் மேற்கு – தென்மேற்கு திசையில் நகரும் இந்த புயலானது, இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும்.
At 1130 IST “BUREVI” centered about 40 km west-northwest of Mannar and 40km east-southeast of Pamban. To move westwards across Pamban area by afternoon. To movewest-southwestwards & cross south TN coast between Pamban and Kanniyakumari during 3rd night & 4th early hours. pic.twitter.com/dJgnIogSeb
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2020