பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு நிறுத்திவைப்பு..!
செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு.
ஓக்கேனக்கல்லில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாலை விபத்தில் சடையப்பன் என்பவர் உயிரிழந்தார். இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரூ.14.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தார். வாகனம் வாங்குபவர்களுக்கு காப்பீடும் விபரத்தை முழுமையாகத் தெரிவிப்பதில்லை என நீதிபதி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையில், பொது காப்பீடு கவுன்சில் என்ற அமைப்பு பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை காப்பீடு நிறுவனங்கள் அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும். மேலும், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்தது.
இதைதொடர்ந்து, பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவுவை நிறுத்திவைத்தது. வழக்கு விசாரணையை வரும் 13-ஆம் தேத்திக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.