பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்! 3 பேர் கைது

பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்.
ராமநாதபுரம் அருகே, சமுகம் வலைத்தளம் மூலம் பெண்கள் ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின நிலையில், சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரித்ததில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறித்து வந்ததும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போலி முகவரிகளை காட்டி, மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மவ்லும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருகிற நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் கூறுகையில், இந்த கும்பலின் கையில் சிக்கி, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025