ஸ்கிம்மர் கருவிகள் மூலம் ATMகளில் திருடிய பல்கேரிய நாட்டை சேர்ந்த கும்பல்!!
நாம் வங்கியில் செலுத்தும் பணம் பத்திரமாக இருக்கும் என மக்கள் நம்பி வந்தனர். அந்த நம்பிக்கையை முறிக்கும் விதமாக, ஸ்கிம்மர் கருவிகளை உபயோகித்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நேற்று நடந்தது. கண்ணகி நகரில் உள்ள ஒரு எடிஎம்ல் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் நீண்ட நேரமாக வெளியே நின்றுகொண்டிருந்தனர். அங்கு ரோந்துக்கு வந்த காவல் துறையினர் சந்தேகத்தில் அவர்கள் மூன்று பேரிடம் விசாரித்தார்.
அப்பொழுது அவர்கள் பல்கேரிய நாட்டினர் என்பதும், பணம் எடுப்பதற்கு எடிஎம் வந்ததாக கூறினார். மேலும் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் அதிகமாகியது. ஆகையால், அவர்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதி அரையில் சோதனை நடத்தினர்.
அங்கு இருந்த பொருட்களை பார்த்து அதிர்ந்து போனார்கள் காவல் துறை அதிகாரிகள். ஏனெனில், அங்கு மோசடிக்கு பயன்படும் ஸ்கிம்மர் கருவிகள், 40 போலி எடிஎம் அட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள், லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பல்கேரியாவை சேர்ந்த நிக்கோலோ, போரிஸ், லீயும் பாபி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சர்வதேச அளவில் நடத்தி வரும் எடிஎம் அட்டை மோசடி வெளிவந்துள்ளது.