வங்க கடலில் உருவானது புல்புல் புயல்
புல்புல் புயல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது.
இந்த புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது . இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி, வங்கதேசம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரத் தொடங்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 10-ம் தேதி வரை, வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.