வங்கக்கடலில் உருவாகிறது 'புல்புல்' புயல்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்தது.ஆனால் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தெரிவித்தது வானிலை ஆய்வு மையம்.அந்தமான் அருகே உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக மாறும் என்று தெரிவித்தது.
இன்று இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது .ஒடிசா அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் புல்புல் புயல் உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளதுதமிழகத்தை பொருத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கதேசத்தை ஒட்டி, கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் கணித்துள்ளது.கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.