கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம்-அமைச்சர் விஜயபாஸ்கர்
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றுள்ளது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தெரிவித்தார்.இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.