புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் “புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெறும் என கூறினார். மேலும் அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார்.
கூட்டத்தொடர் எவ்வளவு நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார். நாடளுமன்ற தேர்தலையொட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வருடந்தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசிடம் பட்ஜெட் குறித்து தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கிய பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024-2025- நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இடைக்கால பட்ஜெட் டாக இருந்தாலும் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா..? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.